தமிழ் வெட்கம் யின் அர்த்தம்

வெட்கம்

பெயர்ச்சொல்

 • 1

  பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு; நாணம்.

  ‘மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கம், அதனால் தூண் மறைவில் நிற்கிறாள்’
  ‘குழந்தை வெட்கத்துடன் அம்மாவை ஒட்டி நின்றுகொண்டது’

 • 2

  அவமானம்.

  ‘ஒரு சிறுவனிடம் சண்டை போட உனக்கு வெட்கமாக இல்லையா?’
  ‘நாங்கள் எல்லாரும் வெட்கப்படும்படியான காரியத்தை நீ செய்துவிட்டாய்’