தமிழ் வெடவெட யின் அர்த்தம்

வெடவெட

வினைச்சொல்வெடவெடக்க, வெட வெடத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கடுங்குளிரினால் அல்லது பயத்தால் உடல்) அதிக அளவில் வேகத்துடன் நடுங்குதல்.

    ‘அதிகாலையில் ஆற்றில் குளித்துவிட்டு ஈர வேட்டியுடன் வெடவெடத்தபடி நின்றான்’
    ‘சிறு வயதில் அவரைப் பார்க்கும்போது எனக்குக் கைகாலெல்லாம் வெடவெடக்கும்’