தமிழ் வெடிபோடு யின் அர்த்தம்

வெடிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பட்டாசை வெடித்தல்.

    ‘தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தாலும், இப்போதிலிருந்தே வெடிபோடத் தொடங்கிவிட்டார்கள்’

தமிழ் வெடிபோடு யின் அர்த்தம்

வெடிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு விடுகதை சொல்லி விடை கேட்டல்.

    ‘மிகக் கஷ்டமான வெடிபோட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது’