தமிழ் வெத்துவேட்டு யின் அர்த்தம்

வெத்துவேட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒன்றைச் செய்துகாட்டாமல் பகட்டுக்காகச் செய்யும் ஆரவாரம்.

  ‘உங்கள் வெத்துவேட்டு வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்’
  ‘அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பெல்லாம் சும்மா வெத்துவேட்டுதான்’

 • 2

  பேச்சு வழக்கு செயலில் எதையும் காட்டாமல் பகட்டாகப் பேசித் திரியும் நபர்.

  ‘அந்த வெத்துவேட்டு சொன்னதை நம்பி இவனும் புதையல் எடுக்கப் போனானாம்!’
  ‘அவன் வெத்துவேட்டாயிற்றே! அவனை நம்பியா வியாபாரத்தில் இறங்கப்போகிறாய்?’