தமிழ் வெந்நீர் யின் அர்த்தம்

வெந்நீர்

பெயர்ச்சொல்

 • 1

  (கொதிக்கும் நிலைக்கு வராத) சூடுபடுத்தப்பட்ட நீர்.

  ‘முதுகில் வெந்நீர் ஒத்தடம் கொடு’

 • 2

  மிகவும் சூடான நீர்.

  ‘காலில் வெந்நீர் கொட்டிப் புண்ணாகிவிட்டது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (குளிக்கப் பயன்படுத்தும் விதத்தில்) மருத்துவக் குணம் உடைய ஆடாதொடை, ஆமணக்கு, நொச்சி ஆகியவற்றின் இலைகளைப் போட்டுத் தயாரிக்கும் சூடான நீர்.

  ‘பிள்ளை பெற்ற மகளுக்கு எப்போது வெந்நீர் வார்க்கப்போகிறாய்?’
  ‘உடம்பெல்லாம் அலுப்பாக இருக்கிறது, வெந்நீர் வைத்துக் குளிக்க வேண்டும்’