தமிழ் வெப்பநிலை யின் அர்த்தம்

வெப்பநிலை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இடத்தில், பொருளில் அல்லது ஒருவருடைய உடலில் இருக்கும் வெப்பத்தின் அளவு.

    ‘கடந்த சில ஆண்டுகளாகப் புவியின் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன’
    ‘ஒரு இடத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப தனது உடலின் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் பிராணி குளிர் இரத்தப் பிராணி ஆகும்’
    ‘உயர்ந்த வெப்பநிலையில் இரும்பு உருகுகிறது’