தமிழ் வெப்பம் யின் அர்த்தம்

வெப்பம்

பெயர்ச்சொல்

 • 1

  சூரியன், நெருப்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி.

  ‘சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை’
  ‘வெப்பக் காற்று’
  ‘இந்த ஆண்டின் கோடை வெப்பத்துக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்’

 • 2

  உடல் உணரும் உயர் நிலை சூடு; உஷ்ணம்.

  ‘உடல் வெப்பத்தைத் தணிக்க மோர் உதவுகிறது’