தமிழ் வெம்பு யின் அர்த்தம்

வெம்பு

வினைச்சொல்வெம்ப, வெம்பி

  • 1

    (பயன்படுத்த முடியாத அளவுக்கு வெப்பத்தால்) பிஞ்சிலேயே பழுத்தல்.

    ‘கத்திரிப் பிஞ்சுகள் வெம்பிப்போய்விட்டன’

  • 2

    (மனம்) வெதும்புதல்.

    ‘மக்களின் அறியாமையைக் கண்டு மனம் வெம்பினார்’