தமிழ் வெயில் யின் அர்த்தம்

வெயில்

பெயர்ச்சொல்

 • 1

  வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி.

  ‘காலை வெயில் முகத்தில் அடித்தது’
  ‘ஏன் வெயிலில் நிற்கிறாய், உள்ளே வா’

 • 2

  சூரிய ஒளியின் வெப்பம்.

  ‘உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றார்’
  ‘ஒரு மாதமாக வெயில் தாங்க முடியவில்லை’