தமிழ் வெற்றி யின் அர்த்தம்

வெற்றி

பெயர்ச்சொல்

 • 1

  (விளையாட்டு, தேர்தல், போட்டி போன்றவற்றில்) உடன் போட்டியிடுபவரைவிடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிகபட்சமான புள்ளிகளை எடுத்தல்.

  ‘அவர் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்’
  ‘வெற்றி தோல்வி இல்லாமல் போட்டி முடிவடைந்தது’
  ‘இன்றையப் போட்டியில் பந்து வீச்சைப் பொறுத்தே வெற்றி அமையும்’
  ‘வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்’

 • 2

  (போரில் எதிரியை) தோற்கடித்தல்.

  ‘ஔரங்கசீப் தன்னை எதிர்த்த சிற்றரசர்களையெல்லாம் வெற்றிகொண்டார்’

 • 3

  (முயற்சி, செயல் போன்றவை) பயன் தரும், நல்ல விளைவை அடையும் நிலை.

  ‘உன் முயற்சிகள் வெற்றிபெற என் வாழ்த்துகள்’
  ‘பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தது’
  ‘அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டார்’
  ‘இந்தத் தீர்ப்பு எனது நீண்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி’
  ‘எளிமையே அவருடைய வெற்றியின் ரகசியம் ஆகும்’

 • 4

  (திரைப்படம், நாடகம் முதலியவை) நல்ல வசூலையும் வரவேற்பையும் பெறும் நிலை.

  ‘நீங்கள் புதிதாக எழுதிய நாடகம் வெற்றியைத் தேடித் தந்ததா?’
  ‘நல்ல படங்கள் வெற்றி அடைவதில்லை என்று கூறி நண்பர் வருத்தப்பட்டார்’