தமிழ் வெற்றிலைபாக்கு வாங்கு யின் அர்த்தம்

வெற்றிலைபாக்கு வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (கலைஞர்கள் நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டதன் அடையாளமாக) ஒரு தட்டில் வெற்றிலை, பழம் போன்றவற்றுடன் முன்பணத்தைப் பெறுதல்.

    ‘ஆடி இரண்டாம் வெள்ளிக் கிழமை கூத்து நடத்த வெற்றிலை பாக்கு வாங்கிவிட்டேன். அந்தத் தேதியை மாற்றிவிட்டு உங்கள் ஊருக்கு வர முடியாது’