வெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெறி1வெறி2வெறி3

வெறி1

வினைச்சொல்வெறிக்க, வெறித்து

 • 1

  எந்த விதச் சிந்தனையும் இல்லாமல் ஒன்றை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருத்தல்; பார்வை ஒன்றின் மீது நிலைத்தல்.

  ‘சாப்பிடப் பிடிக்காமல் சோற்றை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்’
  ‘ஏன் வேலையை விட்டாய் என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் சுவரை வெறித்துப் பார்த்தான்’

 • 2

  (மிரட்சி, ஆர்வம், கோபம் போன்றவை வெளிப்படும் விதத்தில் ஒருவரை) வெகு நேரமாக உற்றுப் பார்த்தல்.

  ‘எதற்காக அவனை அப்படி வெறித்துப் பார்க்கிறாய்?’
  ‘என்னையே அவன் வெறிக்கவெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறான்’

 • 3

  வட்டார வழக்கு (மாடு முதலியவை) மிரளுதல்.

  ‘குடையைக் கண்டால் மாடு வெறிக்கும் என்று தெரியாதா?’

வெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெறி1வெறி2வெறி3

வெறி2

வினைச்சொல்வெறிக்க, வெறித்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (ஓர் இடம் ஆட்கள் இல்லாமல்) வெறிச்சோடியிருத்தல்.

  ‘தெரு வெறித்துக்கிடந்தது’

 • 2

  வட்டார வழக்கு (மழை பெய்து வானம்) தெளிதல்.

  ‘மழை வெறித்த பின் போகலாம்’

வெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெறி1வெறி2வெறி3

வெறி3

பெயர்ச்சொல்

 • 1

  (கோபம், குடிபோதை ஆகியவற்றினால் உந்தப்பட்டு) கண்மூடித்தனமாக அல்லது கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொள்ளும் நிலை.

  ‘குடி வெறியில் தகப்பனையே அடிக்கப்போய்விட்டான்’
  ‘மக்கள் மீது கொள்ளைக்காரர்கள் வெறித்தனமாகச் சுட்டனர்’

 • 2

  (ஒன்றின் மீது கொண்டிருக்கும்) நியாயமான அளவைத் தாண்டிவிட்ட ஆர்வம் அல்லது ஆசை.

  ‘மத வெறியைத் தூண்டிவிடுகிறார்கள்’
  ‘பதவி வெறி பிடித்து அலைகிறான்’
  ‘போர் வெறி’
  ‘இன வெறி’
  ‘மொழி வெறி’

 • 3

  (ஒன்றை அடைவதற்கும் செய்வதற்கும் ஏற்படுகிற அல்லது ஏற்படுத்திக்கொள்ளுகிற) அதீதமான ஆவேச உணர்ச்சி.

  ‘அவளைப் பார்க்க வேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்தது’
  ‘இன்று இரவே கதை எழுதி முடித்துவிட வேண்டும் என்ற வெறியோடு எழுதினான்’
  ‘அவன் கண்களில் ஒரு கொலை வெறி தெரிந்தது’

 • 4

  வைரஸ் தாக்குவதால் நாய், பன்றி போன்ற விலங்குகளுக்கு ஏற்படும் (அவை கடித்தால் மனிதனுக்கும் பரவும்) கொடிய நோய்.

  ‘நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருப்பதற்காக ஊசி போடுவார்கள்’
  ‘வெறி நாய்’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (மது அருந்துவதால் ஏற்படும்) போதை.

  ‘கள்ளைக் குடித்துவிட்டு வெறியில் வருகிறான்’
  ‘அவர்கள் அடித்த அடியில் அவனுக்கு வெறி முறிந்திருக்கும்’
  ‘இவனோடு இப்போது கதைக்க முடியாது. வெறியில் இருக்கிறான்’