தமிழ் வெறிச்சோடு யின் அர்த்தம்

வெறிச்சோடு

வினைச்சொல்வெறிச்சோட, வெறிச்சோடி

  • 1

    (ஓர் இடம்) ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருத்தல்; வெறுமையாதல்.

    ‘திருமணம் முடிந்த பிறகு வீடு வெறிச்சோடிவிட்டது’
    ‘எந்நேரமும் குழந்தைகள் விளையாடிய வீடு வெறிச்சோடிக்கிடந்தது’
    ‘முழு அடைப்பின் காரணமாகச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன’