தமிழ் வெறு யின் அர்த்தம்

வெறு

வினைச்சொல்வெறுக்க, வெறுத்து

 • 1

  சற்றும் பிடிக்காத காரணத்தால் ஒன்றையோ ஒருவரையோ சகித்துக்கொள்ள முடியாத உணர்வை மனத்தில் வளர்த்துக்கொள்ளுதல்.

  ‘‘சுயநலக்காரர்களை நான் வெறுக்கிறேன்’ என்று கோபத்துடன் நண்பர் கூறினார்’
  ‘இந்த மாதிரியான ஆடம்பரங்கள் வெறுக்கத் தக்கவை’

 • 2

  (ஒன்றின் மேல்) விருப்பம் இல்லாமல் போதல்; வெறுமை உணர்வு தோன்றுதல்.

  ‘இருபது வயதிலேயே வாழ்க்கை வெறுத்துவிட்டதா உனக்கு?’
  ‘படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் மனம் வெறுத்துப்போய்ப் பேசினார்’