தமிழ் வெறுங்கையுடன் யின் அர்த்தம்

வெறுங்கையுடன்

வினையடை

 • 1

  எதையும் கொண்டுவராமல் அல்லது எதையும் கொண்டுசெல்லாமல்.

  ‘எப்படியாவது பணத்தோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, இப்போது வெறுங்கையுடன் வந்து நிற்கிறாயே?’
  ‘தம்பி வீட்டுக்குப் போகும்போது வெறுங்கையுடனா போவது? குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டுப் போனால்தானே நன்றாக இருக்கும்’
  ‘கோப்பையை வென்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வெறுங்கையுடன் திரும்பி வந்தது’
  உரு வழக்கு ‘போர் நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற குழு வெறுங்கையுடன் திரும்பிவந்தது’