தமிழ் வெறுப்பு யின் அர்த்தம்

வெறுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்கும் நிலை.

  ‘அவருக்குக் கத்திரிக்காய் என்றாலே அளவுகடந்த வெறுப்பு’
  ‘திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தைப் பேசுவது வெறுப்பைத் தருகிறது’
  ‘மக்களிடம் வெறுப்பை வளர்க்கும் விதத்தில் ஊடகங்கள் செயல்படக் கூடாது’

 • 2

  வெறுமை உணர்வு; விரக்தி.

  ‘வாழ்க்கையில் வெறுப்புத் தட்டிவிட்டது’
  ‘பதவி உயர்வு கிடைக்காததால் வெறுப்பு அடைந்திருக்கிறார்’