தமிழ் வெறும் யின் அர்த்தம்

வெறும்

பெயரடை

 • 1

  உள்ளே எதுவும் இல்லாத; காலியான.

  ‘எண்ணெய் இல்லாத வெறும் பாட்டில்’
  ‘வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடாதே’
  ‘காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்’
  ‘வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது’

 • 2

  (உடல், உடல் உறுப்புகள் முதலியவை குறித்து வரும்போது அவற்றில்) எதுவும் அணியாத.

  ‘யாரோ அலறும் சத்தம் கேட்டதும் வெறும் உடம்போடு தெருவுக்கு ஓடிவந்தார்’
  ‘‘வெறும் கழுத்தோடு கல்யாணத்துக்குப் போவதா?’ என்று அம்மா அப்பாவிடம் கேட்டாள்’
  ‘வெறுங்காலோடு நடக்காதே. செருப்புப் போட்டுக்கொள்!’

 • 3

  ‘குறிப்பிடப்படுவதில் அல்லது குறிப்பிடப்படுவதன் மேல் எதுவும் இல்லாத’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘வெறும் தட்டை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது?’
  ‘வெறும் தரையில்படுக்காதே. கீழே துண்டையாவது விரித்துப் போட்டுக்கொள்’
  ‘அவன் உன்னிடம் வெறும் தாளில் கையெழுத்துக் கேட்டால் போட்டுக்கொடுக்காதே!’

 • 4

  ‘பிறவற்றின் உதவியின்றி குறிப்பிடப்படுவதன் மூலமாகவே’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘வெறும் கண்ணால் பார்க்க முடியாத மிகச் சிறிய நுண்ணுயிரிகள்’
  ‘பணத்தைக் கொண்டு என்னால் சாதிக்க முடியாததை அவன் வெறும் பேச்சாலேயே சாதித்துவிட்டான்’

 • 5

  ‘வேறு எதுவும் இல்லாமல் குறிப்பிட்டது மட்டும்தான்’ என்பதைக் கூறப் பயன்படும் சொல்.

  ‘இதெல்லாம் வெறும் வதந்தி’
  ‘வெறும் சாதத்தை எப்படிச் சாப்பிட முடியும்?’
  ‘குழாயில் தண்ணீர் வரவில்லை. வெறும் சத்தம்தான் வந்தது’
  ‘தொலைக்காட்சியை வெறும் பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை’
  ‘வெறும் தகவலை மட்டும் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது’
  ‘இந்தக் கீரைகள் வெறும் உணவாக மட்டுமின்றி மூலிகைகளாகவும் பயன்படுகின்றன’