தமிழ் வெறுமனே யின் அர்த்தம்

வெறுமனே

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எதுவும் செய்யாமல்; சும்மா.

  ‘முயற்சிசெய்யாமல் இப்படி வெறுமனே உட்கார்ந்திருந்தால் வேலை எப்படிக் கிடைக்கும்?’
  ‘அவர்கள் இருவரும் சண்டைபோடும்போது நீ வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாயா?’
  ‘எதற்கெடுத்தாலும் வெறுமனே கத்துவானே தவிர அவனால் ஒன்றும் செய்ய முடியாது’

 • 2

  பேச்சு வழக்கு அவசியமானதுகூட இல்லாமல்; எதுவும் இல்லாமல்.

  ‘சோற்றை எப்படி வெறுமனே சாப்பிட முடியும்? குழம்பு வேண்டாமா?’
  ‘வீடு வெறுமனே கிடக்கிறது’

 • 3

  பேச்சு வழக்கு உரிய முறையில் அல்லாமல்.

  ‘கதவை வெறுமனே சாத்திவிட்டுக் குப்பைகொட்டப் போனாள்’

 • 4

  பேச்சு வழக்கு (ஒரு செயலைச் செய்யும்போது அதற்கு) மிகவும் அவசியமானவற்றை அல்லது முக்கியமானவற்றைச் செய்யாமல்.

  ‘‘அடிப்படை வசதிகளைச் செய்து தராமல் வெறுமனே கல்விமூலம் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவிட முடியாது’ என்றார் பேராசிரியர்’
  ‘வெறுமனே நடித்தால் மட்டும் போதுமா? தகுந்த முகபாவங்களும் காட்ட வேண்டும் அல்லவா?’