தமிழ் வெறுமை யின் அர்த்தம்

வெறுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எதுவும் இல்லாதது போன்ற உணர்வு; எதிலும் பிடிப்பு இல்லாத உணர்வு; சூன்யம்.

  ‘குடித்தால் வாழ்க்கையின் வெறுமை போய்விடுமா?’
  ‘நண்பர்கள் சென்றதும் அவன் மனத்தில் வெறுமை கவிந்தது’
  ‘முதுமையையும் வெறுமையையும் யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது என்று நண்பர் கூறினார்’

 • 2

  (ஒன்றில் அல்லது ஓர் இடத்தில்) இருக்க வேண்டியது இல்லாத நிலை; அதற்கு உரியது இல்லாத நிலை.

  ‘அவள் கழுத்தும் கைகளும் வெறுமையாக இருந்தன’
  ‘ஊரடங்கு உத்தரவின் காரணமாகச் சாலைகள் வெறுமையாகக் காட்சியளித்தன’
  ‘இலைகளற்று வெறுமையாகக் காணப்பட்ட மரம்’