தமிழ் வெற்றிடம் யின் அர்த்தம்

வெற்றிடம்

பெயர்ச்சொல்

 • 1

  காலி இடம்.

  ‘வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வெற்றிடத்தில் பூச்செடிகளை நட்டிருந்தார்’

 • 2

  ஓர் இடம், பொருள் போன்றவற்றில் காற்று, உள்ளீடு போன்றவை எதுவும் இல்லாத தன்மை.

  ‘வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது’
  ‘குழல்விளக்கின் உள்ளே வெற்றிடம் இருப்பதால்தான் அது ஒளிர்கிறது’
  உரு வழக்கு ‘தலைவரின் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை’