தமிழ் வெல் யின் அர்த்தம்

வெல்

வினைச்சொல்வெல்ல, வென்று

 • 1

  (போர், போட்டி முதலியவற்றில்) வெற்றி அடைதல்; வெற்றி பெறுவதன்மூலம் ஒன்றை அடைதல்.

  ‘இரண்டே ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது’
  ‘ஒரு காலத்தில் எவராலும் வெல்ல முடியாத குத்துச்சண்டை வீரராக முகம்மது அலி திகழ்ந்தார்’
  ‘அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றார்’
  ‘சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்ற பெண்’

 • 2

  (சிறப்பான செயல்பாட்டின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரை) மிஞ்சுதல்.

  ‘அவனைப் பேச்சில் வெல்ல முடியாது’
  ‘இறுதியில் நீதி வெல்லும் என்பது நம் நம்பிக்கை’
  ‘அழகில் அவளை வெல்ல யாருமே இல்லை’
  ‘சோம்பேறித்தனத்தைப் போக்கினால் உலகையே வெல்லலாம் என்றார் அவர்’