தமிழ் வெள்ளம் யின் அர்த்தம்

வெள்ளம்

பெயர்ச்சொல்

 • 1

  (கடும் மழை, கரைபுரண்டு ஓடும் ஆறு முதலியவற்றால் ஏற்படும்) நீர்ப்பெருக்கு; பெருமளவில் விரைந்துசெல்லும் தண்ணீர்.

  ‘பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன’
  ‘வெள்ளம்போல் மக்கள் கூட்டம்’

 • 2

  (ஒன்றின்) மிகுதி; மிகுதியான நிலை.

  ‘இரத்த வெள்ளத்தில் மிதந்தான்’
  ‘அன்பு வெள்ளம்’
  ‘உணர்ச்சி வெள்ளம்’