தமிழ் வெள்ளி யின் அர்த்தம்

வெள்ளி

பெயர்ச்சொல்

 • 1

  (ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும்) விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம்.

  ‘வெள்ளி விளக்கு’
  ‘வெள்ளிப் பூச்சு’
  ‘வெள்ளிக் கொலுசு’

 • 2

  சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் செலாவணியாகும் நாணயம்.

  ‘சிங்கப்பூரிலிருந்து திரும்பியவுடன் தன்னிடமிருந்த ஆயிரம் வெள்ளிகளையும் ரூபாயாக மாற்றிக்கொண்டான்’

தமிழ் வெள்ளி யின் அர்த்தம்

வெள்ளி

பெயர்ச்சொல்

 • 1

  (சூரியக் குடும்பத்தில்) சூரியனை அடுத்து உள்ள கிரகம்; சுக்கிரன்.

  ‘வெள்ளிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 10.82 கோடி கிலோமீட்டர் ஆகும்’

 • 2

  (மேற்குறிப்பிட்ட கிரகத்தின் பெயரைக் கொண்ட) வாரத்தின் ஆறாவது நாள்.

  ‘பள்ளிக்கு வெள்ளியும் சனியும் விடுமுறை என்று அறிவித்திருந்தார்கள்’

 • 3

  (பொதுவாக) நட்சத்திரம்; (குறிப்பாக) விடிவெள்ளி.

  ‘வெள்ளி முளைத்துவிட்டது’