தமிழ் வெள்ளை யின் அர்த்தம்

வெள்ளை

பெயர்ச்சொல்

 • 1

  பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.

 • 2

  கள்ளங்கபடம் இல்லாதது.

  ‘வெள்ளை உள்ளம் கொண்டவர்’
  ‘அவருக்கு மனசு வெள்ளை’

தமிழ் வெள்ளை யின் அர்த்தம்

வெள்ளை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சலவை.

  ‘இந்தத் துணி இரண்டு வெள்ளைக்கு நின்றுபிடிக்காது, சாயம் போய்விடும்’