தமிழ் வெள்ளையடி யின் அர்த்தம்

வெள்ளையடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (கட்டடம், சுவர் முதலியவற்றுக்குப் பொலிவு தருவதற்காக) சுண்ணாம்புக் கரைசலை அல்லது ரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட வண்ணங்களைப் பூசுதல்.

    ‘பொங்கலுக்கு முன்னால் வீடுகளுக்கு வெள்ளையடிப்பது வழக்கம்’
    ‘வீடு முழுக்க லேசான நீலத்தில் வெள்ளையடித்திருந்தார்கள்’
    ‘இந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் உள்ள இருபது குடியிருப்புகளுக்கும் புதிதாக வெள்ளையடிக்க வேண்டும்’