வெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெளி1வெளி2

வெளி1

வினைச்சொல்வெளிக்க, வெளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரைப் பற்றிய விரும்பத்தகாத விஷயங்கள்) வெளிப்படுதல்.

  ‘நீ இதுவரை காரியாலயத்தில் செய்த திருகுதாளமெல்லாம் வெளித்துவிட்டது’
  ‘உன் தொடர்புகளெல்லாம் வெளித்துவிட்டது’

வெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெளி1வெளி2

வெளி2

பெயர்ச்சொல்

 • 1

  பரந்திருப்பது.

  ‘புல்வெளி’
  ‘வானவெளி’

 • 2

  உட்பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது.

  ‘வெளிச் சுவருக்கு என்ன வர்ணம் பூசலாம்?’
  ‘வெளிப் பரப்பு’
  ‘பாத்திரத்தின் வெளி விளிம்பில் ஒரு சிறு கீறல்’

 • 3

  ஓர் இடத்தைச் சாராதது.

  ‘இந்தக் குடியிருப்புக்குள் வெளி வண்டிகளை நிறுத்தக் கூடாது’

 • 4

  கண்ணுக்கு நேரடியாகத் தெரியும் வகையில் இருப்பது.

  ‘வெளித் தோற்றத்தை வைத்து நம்பிவிடாதே’

 • 5

  இயற்பியல்
  அண்டம்.

  ‘காலத்திற்கும் வெளிக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் தத்துவம்’