தமிழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வா யின் அர்த்தம்

வெளிச்சத்துக்குக் கொண்டு வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (இதுவரை வெளியே தெரியாமல் இருந்ததை) பலரும் அறியும்படி செய்தல்.

    ‘அந்த அரசியல்வாதி செய்த ஊழல்களையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் பத்திரிகைகள் பெரும் பங்காற்றியுள்ளன’
    ‘அந்தப் பெரிய மனிதரின் லீலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது யார் தெரியுமா? அவர் வீட்டு வேலைக்காரன்’
    ‘பல இளம் கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இயக்குநர் இவர்’