தமிழ் வெளிச்சம் யின் அர்த்தம்

வெளிச்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (சூரியன், சந்திரன் அல்லது விளக்கு போன்றவற்றிலிருந்து வரும்) ஒளி.

  ‘மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்’
  ‘மெழுகுவர்த்தியின் வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது’
  ‘சூரிய வெளிச்சம்’
  ‘மின்சாரம் போய்விட்டதால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்டோம்’
  ‘வெளிச்சத்தில் கண் கூசியது’
  ‘அடுப்பு வெளிச்சத்தில் அவள் முகம் சிவப்பாக இருந்தது’
  ‘பூச்சிகள் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகின்றன’

 • 2

  ஒளி பொருள்களின் மீது பட்டுத் திரும்புவதால் கண்ணுக்குக் கிடைக்கும் தெளிவு; பிரகாசம்.

  ‘நல்ல வெளிச்சமான அறை’
  ‘முன்பு குடியிருந்த வீட்டில் பகலில்கூட வெளிச்சம் கிடையாது’
  ‘அதிக வெளிச்சம் இல்லாத அறை’