தமிழ் வெளிநடப்பு யின் அர்த்தம்

வெளிநடப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அவை, கூட்டம் போன்றவற்றிலிருந்து ஒருவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மேற்கொண்டு பங்கேற்காமல் அவற்றிலிருந்து வெளியேறிச் செல்லும் செயல் அல்லது நடவடிக்கை.

    ‘கூறியவற்றைத் திரும்பப் பெற அமைச்சர் மறுத்ததால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்’
    ‘தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு உரிய மதிப்புத் தருவதில்லை என்று கூறித் திரைப்பட விழாக் கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்புச் செய்தார்’
    ‘பயிற்சிக்கு மைதானம் ஒதுக்கப்படாததால் பாகிஸ்தான் அணியினர் வெளிநடப்பு’