தமிழ் வெளிப்படு யின் அர்த்தம்

வெளிப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர் ஒன்றிலிருந்து) வெளியே வருதல்.

  ‘கரு மேகங்களிலிருந்து நிலவு வெளிப்பட்டுப் பிரகாசித்தது./’
  ‘துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டு நேர்கோட்டில் பாய்கிறது’
  ‘அறையிலிருந்து குழந்தையுடன் வெளிப்பட்டாள்’

 • 2

  (ஒரு தன்மை, நிலை போன்றவை) உணரக்கூடிய வகையில் தோன்றுதல்.

  ‘கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய பேராசிரியர் நகைச்சுவை உணர்வு வெளிப்படப் பேசினார்’
  ‘அவருடைய எரிச்சல் கோபமாக வெளிப்பட்டது’
  ‘சிறுவனின் பேச்சில் அறியாமை வெளிப்பட்டது’

 • 3

  (ரகசியம், உண்மை போன்றவை) பலரும் அறியக் கூடியதாதல்; பகிரங்கமாதல்.

  ‘என்றாவது ஒரு நாள் உண்மை வெளிப்பட்டே தீரும்’
  ‘இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும்’
  ‘தன்னுடைய குட்டு எங்கே வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்துதான் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார்’

 • 4

  (ஒரு செயல்பாடு, நிகழ்வு போன்றவற்றின் விளைவாக ஒன்று) தோன்றுதல்; உருவாதல்.

  ‘துத்தநாகம் போன்ற உலோகத்தை நீரில் சேர்த்துக் கொதிக்கவைக்கும்போது ஹைட்ரஜன் வெளிப்படுகிறது’