தமிழ் வெளிப்படுத்து யின் அர்த்தம்

வெளிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (உணர்வு, திறமை, கருத்து முதலியவற்றை) அறியக்கூடிய வகையில் வெளிப்படச்செய்தல்.

  ‘அவர் கோபத்தைக் கண்கள் வெளிப்படுத்தின’
  ‘உன் திறமையை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு’
  ‘கருத்தை வெளிப்படுத்த மொழிதான் சிறந்த சாதனம்’
  ‘கதாசிரியரின் நடை என்பது அவரின் தனித் தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்’
  ‘இந்தக் கவிதை அவருடைய மொழிப் புலமையை வெளிப்படுத்துகிறது’
  ‘உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கிவைப்பது தவறு’
  ‘மன முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பேச்சு’
  ‘உன் மனத்தில் உள்ளதை ஒளிக்காமல் வெளிப்படுத்தலாம்’

 • 2

  (உண்மை, ரகசியம் போன்றவற்றை) பலரும் அறியச் செய்தல்; பகிரங்கமாக்குதல்.

  ‘அவரைப் பற்றிய உண்மையை ஒருநாள் நாங்கள் வெளிப்படுத்துவோம்’