தமிழ் வெளிப்பாடு யின் அர்த்தம்
வெளிப்பாடு
பெயர்ச்சொல்
- 1
(எண்ணம், உணர்வு முதலியவற்றை) வெளிப்படுத்துவது அல்லது வெளியிடுவது.
‘கவிதை கவிஞனின் எண்ண வெளிப்பாட்டுச் சாதனம்’‘உணர்வுகளின் வெளிப்பாடாக அங்க அசைவுகள் ஏற்படுகின்றன’‘வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடுகளே பழமொழிகள்’‘இதை அவருடைய சாமர்த்தியத்தின் வெளிப்பாடாகவே நினைக்கிறேன்’‘எண்ணங்களின் வெளிப்பாடு மொழி எனலாம்’ - 2
(குறிப்பிட்ட உணர்ச்சி, தன்மை, போக்கு போன்றவற்றை) வெளிப்படுத்துவதாக இருப்பது.
‘நாங்கள் தேர்தலில் அடைந்திருக்கும் வெற்றி எங்கள்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு’‘இன்றைய பண்பாட்டு மாற்றங்கள் உலகமயமாதலின் வெளிப்பாடு ஆகும்’ - 3
இலங்கைத் தமிழ் வழக்கு இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வரும் செயல்.
‘சில நாட்களாக அவளின் வெளிப்பாட்டைக் காணவில்லை’‘ஊரில் அடி வாங்கியதிலிருந்து அவனுடைய வெளிப்பாடு குறைவாக இருக்கிறது’