தமிழ் வெளிப்படை யின் அர்த்தம்

வெளிப்படை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறர் தெளிவாக அறியக்கூடிய வகையில் இருப்பது; பகிரங்கம்.

  ‘தான் செய்தது தவறுதான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டான்’
  ‘இதுதான் இந்தச் செய்யுளின் வெளிப்படையான பொருள்’
  ‘சில சொற்கள் வெளிப்படையாக ஒரு பொருளையும் மறைமுகமாக வேறொரு பொருளையும் உணர்த்தும்’
  ‘எங்கள் அமைப்பின் செயல்பாடு என்றைக்குமே வெளிப்படையாகத்தான் இருக்கும்’

 • 2

  ஒளிவுமறைவு இல்லாத தன்மை.

  ‘அவருடைய வெளிப்படையான பேச்சு பலரை அவருக்கு எதிரியாக்கியது’
  ‘இந்த விஷயத்தை அவரிடம் நான் வெளிப்படையாகச் சொல்லிவிடப்போகிறேன்’
  ‘எனக்கு எதையும் வெளிப்படையாகப் பேசித்தான் பழக்கம்’

 • 3

  நேரடியாகப் புலனாகும் விதத்தில் இருப்பது.

  ‘இவை நீரிழிவு நோயின் வெளிப்படையான அறிகுறிகள்’