தமிழ் வெளியார் யின் அர்த்தம்

வெளியார்

பெயர்ச்சொல்

 • 1

  வேற்று மனிதர்கள்.

  ‘வெளியார் வாகனங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை’
  ‘இந்த அமைப்பின் குழுக் கூட்டத்தில் வெளியார் யாரும் கலந்துகொள்ள முடியாது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (உறவினர் அல்லாத) அந்நியர்.

  ‘இலங்கை சட்ட மூலத்தின்படி சொறியல் காணியை வெளியாருக்கு விற்க முடியாது’