தமிழ் வெளியே யின் அர்த்தம்
வெளியே
வினையடை
- 1
குறிப்பிடப்படும் ஒரு இடத்தை அல்லது எல்லையைத் தாண்டி.
‘வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்’‘கடையை விட்டு வெளியே வந்தார்’‘கோபத்தில் மகனை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தினார்’‘வெளியே சற்று நடந்துவிட்டு வருவோமா?’‘அவன் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது’‘கோயிலுக்கு வெளியே கால் வைக்க முடியாத அளவுக்குக் கூட்டம்’ - 2
(பேச்சால் அல்லது செயல்பாடுகளால்) பிறர் அறியும்படி.
‘வெளியே சொன்னால் வெட்கக் கேடான விஷயம்’‘ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது’‘என்மேல் உள்ள கோபத்தை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை’ - 3
மூடப்பட்டிருத்தல், அடைத்திருத்தல் முதலிய நிலைகளிலிருந்து மூடப்படாத, அடைத்திருக்காத நிலைகளை நோக்கி.
‘உறையிலிருந்து கத்தியை வெளியே எடுத்தான்’‘பையிலிருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தான்’‘கூடைக்குள் இருந்த பாம்பு மெதுவாக வெளியே வரத் தொடங்கியது’‘இந்தப் பறவை இரவு நேரங்களில் மட்டுமே கூட்டை விட்டு வெளியே வரும்’