தமிழ் வெளியேறு யின் அர்த்தம்

வெளியேறு

வினைச்சொல்வெளியேற, வெளியேறி

 • 1

  (ஒன்றை விட்டு) வெளியில் செல்லுதல்.

  ‘அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறியது’
  ‘கூட்டத்தை விட்டு வெளியேறுவதற்குள் வியர்த்துக்கொட்டிவிட்டது’
  ‘நுரையீரலின் இயக்கத்தால் காற்று உள்ளே செல்லவும் வெளியேறவும் முடிகிறது’
  ‘சிறுநீரகம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும்போது அதில் உள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறுகின்றன’
  ‘காய்கறிகளை அளவுக்கதிகமாக வேகவைத்தால் அதிலுள்ள சத்துகள் வெளியேறிவிடும்’

 • 2

  (வீடு, நாடு, பதவி முதலியவற்றை விட்டு) அகலுதல்; நீங்குதல்.

  ‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழங்காதவர்கள் இல்லை’
  ‘வீட்டை விட்டு வெளியேறிய தன் மகனைப் பற்றிப் பேசும்போது அவருடைய கண்கள் கலங்கும்’
  ‘தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தராததால் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர்’
  ‘உள்நாட்டுக் கலகத்தைத் தொடர்ந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்’

 • 3

  (தொடர்ச்சியாக நடைபெறும் போட்டிகளில் ஒருவர் அல்லது ஒரு அணி மேற்கொண்டு விளையாடாமல்) விலகுதல் அல்லது விலக்கப்படுதல்.

  ‘புள்ளிகள் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குப்போக முடியாதவாறு வெளியேறியது’
  ‘இனவெறிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகத் தமது அணி போட்டியிலிருந்து வெளியேறுகிறது என்று அந்த அணித் தலைவர் அறிவித்தார்’