தமிழ் வெளிறு யின் அர்த்தம்

வெளிறு

வினைச்சொல்வெளிற, வெளிறி

  • 1

    (மேகம் அல்லது இருள் விலகி வானம்) தெளிவாகக் காணப்படுதல்.

    ‘வானம் வெளிறிக்கிடந்தது’

  • 2

    (பயம், நோய் முதலியவற்றால்) உடல் இயல்பான நிறத்தை அல்லது முகம் களையை இழத்தல்.

    ‘அவன் முகம் பயத்தால் வெளிறிவிட்டது’