தமிழ் வெளிவா யின் அர்த்தம்

வெளிவா

வினைச்சொல்வெளிவர, வெளிவந்து

 • 1

  (கட்டுரை, கதை முதலியவை பத்திரிகையில்) பிரசுரமாதல்; (புத்தகம் அச்சாகி) விற்பனைக்கு வருதல்; (திரைப்படம், ஒலிநாடா போன்றவை) வெளியிடப்படுதல்.

  ‘பத்திரிகையில் தன் கட்டுரை வெளிவந்திருக்கிறதா என்று ஆவலோடு பார்த்தார்’
  ‘இப்போது வெளிவரும் படங்களில் கதை இருப்பதாகத் தெரியவில்லை’
  ‘உலகெங்கும் பல்வேறு மொழிகளிலும் பைபிள் வெளிவந்திருக்கிறது’

 • 2

  (ஒன்றிலிருந்து இன்னொன்று) வெளிப்படுதல்.

  ‘விதையிலிருந்து வெளிவரும் முளை’
  ‘முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருவதை அழகாகப் படம்பிடித்திருந்தார்கள்’
  ‘கரடிகள் கரையான் புற்றை நசுக்கி அதிலிருந்து வெளிவரும் கரையான்களைப் பிடித்துத் தின்னும்’
  ‘இந்தத் தனிமத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஆபத்தானது’

 • 3

  (முடிவு, கருத்து முதலியவை) வெளியிடப்படுதல் அல்லது வெளியாதல்.

  ‘நாளைமுதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்’
  ‘பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன’

 • 4

  (தண்டனை முடிந்து சிறையிலிருந்து) வெளியே வருதல்.

  ‘சிறையிலிருந்து வெளிவந்த பின் பத்திரிகை தொடங்கினார்’

 • 5

  (பிரச்சினை, சிக்கல் போன்றவற்றிலிருந்து) மீளுதல்.

  ‘இந்தச் சிக்கலிலிருந்து எப்படித்தான் வெளிவரப்போகிறேனோ தெரியவில்லை’