தமிழ் வெளு யின் அர்த்தம்

வெளு

வினைச்சொல்வெளுக்க, வெளுத்து

 • 1

  (துணிகளை அழுக்கு நீக்கி) சுத்தப்படுத்துதல்; வெண்மையாக்குதல்.

  ‘துணியை வெளுக்கப் போட வேண்டும்’

 • 2

  (பயம், நோய் போன்றவற்றால்) வெளிறுதல்.

  ‘பயத்தில் அவர் முகம் வெளுத்தது’
  ‘பிரசவத்திற்குப் பின் அவள் உடல் வெளுத்துவிட்டது’

 • 3

  (கருப்பாகவோ மாநிறமாகவோ இருக்கும் ஒருவர்) வெளிர் நிறத்தைப் பெறுதல்.

  ‘நான் பத்து வருடத்திற்கு முன் பார்த்ததைவிட அவன் இப்போது நன்றாக வெளுத்திருக்கிறான்’

 • 4

  (இருள் அகன்று) வெளிச்சமாதல்.

  ‘கிழக்கு வெளுத்துவிட்டது’
  ‘மழை நின்று வானம்வெளுக்க ஆரம்பித்தது’
  ‘வானம் வெளுத்து சூரியன் தெரிய ஆரம்பித்தது’

 • 5

  (தலைமுடி) நரைத்தல்.

  ‘தலையெல்லாம் வெளுத்துத் தோல் சுருக்கம் கண்ட பின்பும் அவருடைய கம்பீரம் குறையவில்லை’