தமிழ் வெளுத்துக்கட்டு யின் அர்த்தம்

வெளுத்துக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  (பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றை) சிறப்பாகச் செய்தல்.

  ‘இன்றைய கச்சேரியில் மிருதங்க வித்வான் வெளுத்துக்கட்டிவிட்டார்’
  ‘அப்பா வேடத்தில் நடிகர் வெளுத்துக்கட்டியிருக்கிறார்’

 • 2

  (வெயில்) கடுமையாக அடித்தல்; (மழை) கடுமையாகப் பெய்தல்.

  ‘இந்த வருடம் மழை வெளுத்துக்கட்டிவிட்டது’

 • 3

  (ஒருவரை அல்லது ஒன்றை) கடுமையாக விமர்சித்தல்.

  ‘எங்கள் சங்க உறுப்பினர் ஒருவரின் வண்டவாளங்களைப் பற்றி அந்தப் பத்திரிகை வெளுத்துக்கட்டியிருந்தது’

 • 4

  (ஒருவரை) நன்றாக அடித்தல்.

  ‘அவருக்குக் கோபம் வந்துவிட்டால் வெளுத்துக்கட்டிவிடுவார். யாரென்று பார்க்க மாட்டார்’