தமிழ் வேகம் யின் அர்த்தம்

வேகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பொதுவாக இயக்கம்குறித்து வரும்போது) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற விதத்தில் கணக்கிடப்படும் அளவு.

  ‘சிறுத்தை மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடியது’
  ‘வாகனம் ஓட்டுபவர்களுக்கு வேகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்’
  ‘இன்று இரவு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்’
  ‘விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணை அசுர வேகத்தில் செல்லத் தொடங்கியது’
  ‘வேகத்தின் விகிதமும் காலத்தின் விகிதமும் எதிர்மாறானவை என்று ஆசிரியர் விளக்கினார்’
  ‘கார் மிக வேகமாக ஓடத் தொடங்கியது’
  ‘மின்விசிறியின் வேகத்தைச் சற்றுக் கூட்டு’
  ‘பந்து மின்னல் வேகத்தில் எல்லைக் கோட்டை அடைந்தது’
  ‘பொருளின் மீது செயல்படும் விசை அதன் வேகத்தை மாற்றுகிறது’
  ‘ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் பல்லாயிரம் மடங்கு அதிகம்’
  ‘இந்த வேகத்தில் நடந்தால் நாம் பேருந்தைப் பிடிக்க முடியாது’
  ‘இப்படித் தலைதெறிக்கும் வேகத்தில் எங்கே ஓடுகிறாய்?’
  ‘நீருக்கு அடியில் மீன் வேகமாக நீந்திச் செல்கிறது’

 • 2

  (இயக்கம், நிகழ்வு, செயல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) வழக்கமானதைவிட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை; விரைவு; துரிதம்.

  ‘வேகமாக நடந்தான்’
  ‘இயற்கை வளங்கள் மிக வேகமாகக் குறைந்துகொண்டு வருகின்றன’
  ‘நகர்ப்புறத்தின் வேகமான வளர்ச்சி’

 • 3

  உந்துதல்; எழுச்சியுற்ற நிலை.

  ‘புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற வேகம் அவனிடம் இருக்கிறது’
  ‘அவருடைய கருத்துகள் புதிய வேகத்துடன் நாடு முழுதும் பரவின’
  ‘கட்டுமானப் பணியில் முன்பு இருந்த வேகம் இப்பொழுது இல்லை’

 • 4

  வட்டார வழக்கு கோபம்.

  ‘புருஷனைத் திட்ட முடியாத வேகத்தில் பையனைப் போட்டு அடித்தாள்’
  ‘அவனைப் பார்த்தாலே எனக்கு வேகம் வருகிறது’

தமிழ் வேகம் யின் அர்த்தம்

வேகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு நாற்றம்.

  ‘தண்ணீரில் மீன் வேகம் அடிக்கிறது’
  ‘புளி வேகம் எனக்குப் பிடிக்காது’