தமிழ் வேட்டுவை யின் அர்த்தம்

வேட்டுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவருக்கு) தீங்கு விளைவித்தல்; திட்டம் போட்டுக் கெடுத்தல்; உலைவைத்தல்.

  ‘அதிகாரியிடம் ஏதோ சொல்லி என் வேலைக்கு வேட்டு வைத்துவிட்டான்’

 • 2

  பேச்சு வழக்கு (எதிர்பாராமல் அல்லது திடீரென்று ஒருவருக்கு) பெரும் செலவு வைத்தல்.

  ‘கொடைக்கானலுக்குச் சுற்றுலா போய் வரலாம் என்று சொல்லி நண்பர் ஐயாயிரம் ரூபாய்க்கு வேட்டுவைத்துவிட்டார்’
  ‘தெரியாத்தனமாகப் பொம்மைக் கடைக்குள் நுழைந்துவிட்டேன். என் பையன் இருநூறு ரூபாய்க்கு வேட்டுவைத்துவிட்டான்’