தமிழ் வேட்டையாடு யின் அர்த்தம்

வேட்டையாடு

வினைச்சொல்வேட்டையாட, வேட்டையாடி

 • 1

  (மனிதர்கள் விலங்கு, பறவை ஆகியவற்றை அல்லது விலங்கு, பறவை போன்றவை தங்கள் இரையை) தேடித் துரத்திக் கொல்லுதல் அல்லது பிடித்தல்.

  ‘இங்குள்ள பழங்குடியினருக்கு வேட்டையாடுவதுதான் முக்கியத் தொழில்’
  ‘அழிந்துவரும் மிருகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்’
  ‘திமிங்கிலங்கள் எண்ணெய்க்காக வேட்டையாடப்படுகின்றன’
  ‘புலிக் குட்டிகள் மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் வேட்டையாடும் திறமையைப் பெற்றுவிடும்’

 • 2

  (குற்றவாளிகள், எதிரிகள் போன்றவர்களை) தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்தல் அல்லது கண்டுபிடித்து அழித்தல்.

  ‘தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது’
  ‘ஒருவர் விடாமல் தன் எதிரிகள் அனைவரையும் அவர் வேட்டையாடிவிட்டார்’