தமிழ் வேடம் யின் அர்த்தம்

வேடம்

பெயர்ச்சொல்

  • 1

    (நடிப்பவர்) தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்பச் செய்துகொள்ளும் அலங்கார ஒப்பனை.

    ‘கதாநாயகன் சாணை பிடிப்பவன்போல் வேடமிட்டுக்கொண்டு கதாநாயகியை மீட்பதற்குச் செல்கிறான்’

  • 2

    (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) பாத்திரம்.

    ‘கதாநாயகியாக நடித்தவர் அம்மா வேடத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்’