தமிழ் வேடிக்கை யின் அர்த்தம்

வேடிக்கை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பார்ப்பதற்கு, கேட்பதற்கு வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சிரிப்பை விளைவிப்பதாகவும் அமைவது.

  ‘நிருபர்களின் பல கேள்விகளுக்கு அமைச்சர் வேடிக்கையாகப் பதில் அளித்தார்’
  ‘இது என்ன வேடிக்கையான விளம்பரம்’
  ‘வேடிக்கையாகச் சொன்னதைத் தவறாக எடுத்துகொண்டாய்’
  ‘கல்லூரி காலத்தில் நடந்த வேடிக்கையான நிகழ்ச்சி ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது’
  ‘நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்’