தமிழ் வேடிக்கை காட்டு யின் அர்த்தம்

வேடிக்கை காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

 • 1

  (குழந்தைகள், சிறுவர்கள் போன்றோருக்கு) வேடிக்கை தரும் முறையிலான செயல்களைச் செய்துகாட்டுதல்; வேடிக்கை பார்க்கச் செய்தல்.

  ‘கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்’
  ‘குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அக்கா பொம்மைகளை வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தாள்’
  ‘நாடகத்தில் இடையிடையே கோமாளி ஒருவன் வேடிக்கை காட்டி எல்லாரையும் சிரிக்கவைத்தான்’
  ‘குழந்தைக்குத் தெருவில் போகும் வாகனங்களை வேடிக்கை காட்டினேன்’