தமிழ் வேண்டு யின் அர்த்தம்

வேண்டு

வினைச்சொல்வேண்ட, வேண்டி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பணிவுடனும் நயமாகவும் ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்.

  ‘தன் வீட்டில் உணவு அருந்துமாறு என்னை வேண்டினார்’
  ‘என்னை வரச்சொல்லி எவ்வளவோ வேண்டியும் என்னால் போக முடியவில்லை’
  ‘எப்படியாவது உதவுமாறு நண்பர் வேண்டவும் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை’
  ‘குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளும்படி பார்வையாளர்களை வேண்டிக்கொள்வது கூத்துக் கலைஞர்களின் வழக்கம்’

 • 2

  உயர் வழக்கு (பிரார்த்தனை செய்து நன்மை உண்டாகுமாறு அல்லது குறிப்பிட்ட ஒன்றைத் தருமாறு இறைவனிடம்) இறைஞ்சுதல்.

  ‘ஆண்டவனை வேண்டிக்கொள், எல்லாம் நல்லபடியாக நடக்கும்’
  ‘உனக்காக நான் வேண்டாத தெய்வம் இல்லை’
  ‘உனக்கு நல்ல புத்தியைக் கொடுக்குமாறு இறைவனிடம் வேண்டுகிறேன்’
  ‘அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்’

தமிழ் வேண்டு யின் அர்த்தம்

வேண்டு

வினைச்சொல்வேண்ட, வேண்டி

 • 1

  தேவையாக இருத்தல்.

  ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’
  ‘எனக்குப் பணம் வேண்டும்’
  ‘இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு மேலும் கொஞ்சம் பொறுமை வேண்டும்’
  ‘கடைக்குப் போகிறேன், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?’
  ‘என்ன வேண்டும் என்று சீக்கிரம் சொல்’
  ‘உன்னை வேலைக்கு வைத்துக்கொண்டதற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’

 • 2

  தேவையான அல்லது போதுமான அளவில் ஒன்று இருத்தல்.

  ‘கல்லூரி தொடங்குவதற்கு வேண்டிய வசதிகள் இந்தக் கிராமத்தில் உண்டா?’
  ‘அவரிடம் வேண்டிய பணம் இருக்கிறது’
  ‘இந்த வீட்டுக்கு ஜன்னல் வேண்டும்’

 • 3

  (‘வேண்டாத’ என்ற வடிவத்தில் மட்டும்) (ஒருவருடைய நலனுடன் ஒன்று) தொடர்பு உடையதாக இருத்தல்.

  ‘இதனால் வேண்டாத பல இன்னல்கள் ஏற்படும்’
  ‘இது என்ன வேண்டாத சிந்தனை?’
  ‘வேண்டாத வேலைகளையெல்லாம் ஏன் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாய்?’
  ‘என் தம்பி வேண்டாத விஷயத்தில் தலையிட்டு அவமானப்பட்டான்’

 • 4

  (ஒருவருக்கு) நெருக்கமாக இருத்தல்.

  ‘அவர் உனக்கு வேண்டிய நபர் என்று தெரிகிறது’
  ‘அவர் தனக்கு வேண்டிய நண்பர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்வார் என்று புகார் கூறப்படுகிறது’
  ‘அமைச்சருக்கு வேண்டாத அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்’

 • 5

  (ஒருவர்) விரும்புதல்.

  ‘நீ எப்போது வேண்டுமானாலும் இந்த வீட்டுக்கு வரலாம்’
  ‘அப்பாவுக்கு வேண்டாத பிள்ளை’

தமிழ் வேண்டு யின் அர்த்தம்

வேண்டு

துணை வினைவேண்ட, வேண்டி

 • 1

  செயல் செய்யப்படுவதன் அவசியத்தை உணர்த்தும் அல்லது மறுக்கும் முறையில் பயன்படுத்தும் துணை வினை.

  ‘உடனடியாக நோயாளிக்கு இரத்தம் ஏற்ற வேண்டும்’
  ‘நீ உடனடியாக ஊருக்குக் கிளம்ப வேண்டும்’
  ‘வீணைக் கம்பிகள் விறைப்பாக இருக்க பிருடைகளை முறுக்க வேண்டும்’
  ‘ரொம்ப இறுக்கமாகக் கட்ட வேண்டாம்’
  ‘அவர் வரும்வரை நீ இங்கு இருக்க வேண்டும்’
  ‘செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது’
  ‘இது படிக்க வேண்டிய புத்தகம்’
  ‘குடும்பத்தைப் பிரிந்து போக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது’

 • 2

  செயல் நிகழ்வதில் தனக்கு உள்ள விருப்பத்தை அல்லது நிகழ்வதன் நிச்சயத்தை வற்புறுத்தும் முறையில் பயன்படுத்தும் துணை வினை.

  ‘ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பு உடையவர்’
  ‘அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், அவர் இப்போது வர வேண்டும்’