தமிழ் வேண்டுமானால் யின் அர்த்தம்

வேண்டுமானால்

வினையடை

 • 1

  ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு அவசியம் என்றால்.

  ‘நான் வேண்டுமானால் அவரிடம் கேட்டுப்பார்க்கட்டுமா?’
  ‘அவர்கள் வேண்டுமானால் வரட்டும், நான் தடை சொல்லப் போவதில்லை’
  ‘வேண்டுமானால் தம்பியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போ’
  ‘வேண்டுமானால் கொஞ்சம் பூண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்’

 • 2

  ஒருவேளை.

  ‘தமிழ் நாட்டில் வேண்டுமானால் நீங்கள் நினைத்தது நடக்கலாம். ஆனால் மத்தியில் அப்படி முடியாது என்று அவர் முழங்கினார்’
  ‘நானா லஞ்சம் வாங்குகிறேன்? நீங்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், நான் அப்படி இல்லை’