தமிழ் வேண்டுமென்றே யின் அர்த்தம்

வேண்டுமென்றே

வினையடை

 • 1

  (ஒன்றைச் செய்யும்போது) தற்செயலாகவோ தவறுதலாகவோ இல்லாமல் தெரிந்தே.

  ‘நான் வழி கேட்டபோது வேண்டுமென்றே தவறான வழியைக் காட்டிவிட்டார்கள்’
  ‘அவனுக்கு விடை தெரியும், வேண்டுமென்றே ‘தெரியாது’ என்று சொல்கிறான்’
  ‘வேண்டுமென்றே யாராவது இப்படிச் செய்வார்களா?’
  ‘சதுரங்கம் விளையாடும்போது என் பெண்ணிடம் நான் வேண்டுமென்றே தோற்றுப்போவேன்’