தமிழ் வேதனை யின் அர்த்தம்

வேதனை

பெயர்ச்சொல்

 • 1

  வருத்தும் துன்பம்; வருத்தம்.

  ‘நடந்த கொடுமையை அந்தப் பெரியவர் வேதனையோடு விவரித்தார்’
  ‘அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வேதனையாக உள்ளது’
  ‘என்ன நடக்குமோ என்ற வேதனை அவர் முகத்தில் தெரிந்தது’

 • 2

  வலி.

  ‘தீக் காயத்தால் சிறுவன் வேதனை தாங்காமல் அழுகிறான்’
  ‘பெரியவர் வேதனையால் துடித்துக்கொண்டிருந்தார்’